விருதுநகர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சுற்றும் முடிந்தவுடன் உடனே பிரதிகள் கொடுக்க வலியுறுத்தி வேட்பாளர்களின் முகவர்கள் பிரச்னையில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணும் பணி வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக், செந்திக்குமார நாடார் கல்லூரியின் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன.
அதில், அருப்புக்கோட்டை தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தில் முதல் சுற்று முடிந்ததும், வாக்கு எண்ணும் அதிகாரிகள் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்களை தெரிவித்தனர். இது ஒரு சிலருக்கு கேட்காத நிலையிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த முகவர்கள் உடனே ஒவ்வொரு சுற்றும் முடிந்தவுடன் வாக்கு விவரங்களை உடனே அச்சு நகலில் வழங்குமாறு கூறி கூச்சலிட்டனர்.
அதையடுத்து உடனே வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அச்சு பிரதிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். இதனால், இரண்டாவது சுற்று வாக்குகள் எண்ணும் பணி 10 நிமிடம் பாதிக்கப்பட்டு, தாமதமாகவே தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.